இந்தியா

ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு: பின் வாங்கினார் கேஜ்ரிவால்

செய்திப்பிரிவு

சச்சரவான கருத்துக்களுக்கு பெயர்போன ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால், ஊடகங்கள் அனைத்தும் பெரும் தொகைகளுக்கு விலைபோய் விட்டதாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து எழுந்த கடும் எதிர்ப்பினால் பின்னர் தான் அப்படிக் கூறவில்லை என்று அவர் பின்வாங்கினார்.

இது குறித்து கேஜ்ரிவால் கூறுகையில், ‘கடந்த ஓராண்டாக எங்கு பார்த்தாலும், மோடி இங்கே மோடி அங்கே... மோடி இதைச் சொன்னார் மோடி அதைச் சொன்னார்... என்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப் பப்பட்டு வருகிறது. ராம ராஜ்யமே வந்துவிட்டதாகவும், ஊழல் ஒழிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஏன் அப்படிச் செய்தார்கள்? ஏனெனில், இந்த தொலைக்காட்சி சானல்களுக்கு மோடியைப் பற்றி பிரச்சாரம் செய்வதற்காக பெரும் தொகைகள் கொடுக்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவித்தார்.

அவர் மேலும், தனக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதற்கு எதிர்ப்பைத் தெரிவித்த கேஜ்ரி வால், இது ஒரு மிகப் பெரிய அரசியல் சதி என்றும், தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் இதைப் பற்றி விசாரணை செய்து ஊடகத் தினர் அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இது பற்றி பாரதிய ஜனதாவின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடே செய்தியா ளர்களிடம் கூறுகையில், `இது ஒரு பாசிசப் போக்கு, அவசரகால மனநிலையில் வெளியான கருத் துக்கள்’ எனப் புகார் கூறினார்.

மத்திய சட்டத்துறை அமைச்சரான கபில் சிபல் செய்தியாளர்

களிடம் கூறுகையில், ‘கேஜ்ரி வாலால் மீடியாவை ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் அவர்கள் திறமையானவர்கள்.’ என்றார். இது பற்றி செய்தியாளர் களிடம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், `கம்யூ னிஸ்ட்டுகள் நீண்ட காலமாக கூறி வந்ததைத்தான் அவர், இப்போது கூறுகிறார். கார்ப்பரேட் நிறுவனங்கள் மோடிக்கு ஆதர வாக உள்ளன. ஆனால், ஒரு காலத்தில் கேஜ்ரிவாலையும் மீடியாக்கள் ஆதரித்தன என்பதை அவர் மறந்து விடக் கூடாது.’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியவுடன், தான் அப்படிக் கூறவில்லை என்றும், மீடியாவுடன் தமக்கு எப்படி வருத்தம் இருக்க முடியும் என்றும் கேஜ்ரிவால் மறுத்துள்ளார். இதற்காக, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் செய்தியாளர்கள் கூட்டம் கூடி இருந்தனர்.

அதில், பேசிய முன்னாள் பத்திரிகையாளரும், டெல்லியின் சாந்தினி சவுக் தொகுதியின் வேட்பாளருமான அசுதோஷ் கூறுகையில், ‘மீடியாவின் ஒரு பகுதியினர்தான் விலை போய் விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். மீடியாக்களில் பல நல்ல, நேர்மையான ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்களும் உள்ளனர். அவர்கள் நல்ல பல பணிகளை செய்ய விரும்புகின்றனர்’ எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT