உ.பி. தேர்தலில் ஆளும் சமாஜ் வாதி கட்சி அல்லது காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சி தோல்வி அடைந்ததால், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் 10 சிறிய கட்சிகளுடன் இணைந்து எல்லா தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அஜித்சிங் தலைமையிலான ஆர்எல்டி நேற்று முன்தினம் அறிவித்தது. மேலும் 8 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது.
இந்நிலையில 2-வது வேட்பாளர் பட்டியலை ஆர்எல்டி நேற்று வெளியிட்டது. இதில் 8 பெண்கள் உட்பட 35 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் கைரானா தொகுதி பாஜக எம்.பி. ஹுக்கும் சிங்கின் மருமகன் அனில் சவுகான் பெயரும் இடம்பெற்றுள்ளது.