இந்தியா

ரயில் விபத்திற்கு மின் கசிவு காரணம்: ரயில்வே அமைச்சர்

செய்திப்பிரிவு

ஆந்திரம் மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் பெங்களூர் - நண்டெட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 2 குழந்தைகள் உள்பட 23 பயணிகள் உயிரிழந்தனர்.

விபத்து குறித்த முதல் தகவல் அடிப்படையில் பார்க்கும் போது இந்த விபத்திற்கு ரயிலில் மின் கசிவு ஏற்பட்டது காரணமாக இருக்கலாம் என ரயில்வே அமைச்சர் மல்லிகா அர்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இருப்பினும் முழுமையான விசாரணைக்குப் பின்னரே விபத்திற்கான காரணத்தை உறுதிபட தெரிவிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மின்துறை மூத்த அதிகரி உள்பட உயர் அதிகாரிகள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இழப்பீடுத் தொகை அறிவிப்பு:

ரயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையும் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், சிகிச்சைக்கான மருத்துவ செலவை முழுமையாக அரசே ஏற்கும் என்றார்.

SCROLL FOR NEXT