காஷ்மீரில் வன்முறை சம்பவங் களில் ஈடுபடுவதற்காக பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளிடமிருந்து பிரிவினைவாத அமைப்புகள் நிதியுதவி பெறுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ), காஷ்மீர், ஹரியாணா மற்றும் டெல்லிக்குட்பட்ட 23 இடங்களில் கடந்த சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
இந்த சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிலானி உள் ளிட்ட பிரிவினைவாத தலைவர்கள் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில், “எங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இது போன்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகிறது. இதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஹைதர்போரா பகுதியில் உள்ள தனது வீட்டில் பிரிவினைவாத தலைவர்கள் கூட்டத்துக்கு ஹுரியத் மாநாடு தலைவர் சையது அலி கிலானி நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து கிலானியின் வீட்டைச் சுற்றி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். அந்த வீட்டுக்குள் செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை.
மேலும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுப்பதற்காக ஜேகேஎல்எப் தலைவர் யாசின் மாலிக்கை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதுபோல ஹுரி யத் அமைப்பின் இணைத் தலைவர் மிர்வைஸ் உமர் பாருக்கையும் வீட்டுக் காவலில் வைத்தனர்.
கடந்த 28-ம் தேதி பாதுகாப்புப் படையினருடனான மோதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி சப்சர் பட் மற்றும் பைசன் அகமது பலியாயினர். இதையடுத்து இவர் களது குடும்பத்தினரைச் சந்தித்த யாசின் மாலிக்கை கைது செய்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.