இந்தியா

பணமதிப்பு நீக்கத்தை ரிசர்வ் வங்கியே பரிந்துரை செய்தது: அருண் ஜேட்லி

பிடிஐ

பணமதிப்பு நீக்கத்தை ரிசர்வ் வங்கியே பரிதுரை செய்தது என்று மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பணமதிப்பு நீக்கம் தொடர்பாக மாநிலங்களவையில் எழுந்த கேள்விகளுக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி இவ்வாறு பதிலளித்தார்.

அவர் கூறியதாவது:

"பணமதிப்பு நீக்கத்தை ரிசர்வ் வங்கியே பரிதுரை செய்தது. பணி மதிப்பு நீக்கம் தொடர்பாக 2016- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி வாரியம் தீவிர ஆலோசனை மேற்கொண்டது. வாரியத்தின் 10 உறுப்பினர்களில் 8 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் பண மதிப்பு நீக்கம் தொடர்பாக இறுதி முடிவு எட்டப்பட்டது. அதன் பரிந்துரை அரசுக்கு நவம்பர் 8-ம் தேதி வழங்கப்பட்டது" என்றார்.

மேலும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கட்டணச் செலவை அரசு குறைக்குமா என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரியின் கேள்விக்கு, "மத்திய அரசு ஏற்கெனவே ரயில் டிக்கெட் மற்றும் பெட்ரோல் தொடர்பான பொருட்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவைக் கட்டணத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கும் இதே போன்று சேவைக் கட்டணத்தை ஏற்க இருக்கிறது" என்று கூறினார்.

SCROLL FOR NEXT