டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 21 பேரை பேரவைச் செயலர்களாக நியமித்ததை உயர் நீதிமன்றம் செல்லாது என அறிவித்துள்ளது.
கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, 21 எம்எல்ஏக் களை பேரவைச் செயலர்களாக நியமித்து அரசாணை வெளி யிட்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
எனினும், “இந்தப் பதவி ஆதாயம் தரும் பதவி அல்ல. பேரவைச் செயலர் பதவிக்கு ஊதியம்/தொகை ஏதும் தரப்படமாட்டாது” என ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ரோஹிணி, நீதிபதி சங்கீதா திங்கர சேகல் ஆகியோரடங்கிய அமர்வு, டெல்லி அரசின் நியமனத்தை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டது.