ஆந்திராவில் மாநில சிறப்பு அந்தஸ்து கோரி, மாணவர்களும் இளைஞர்களும் வரும் 26-ம் தேதி முதல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இப்போராட்டத்துக்கு ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஒரு கலாச்சாரத்துக்கான தங்களின் அடையாளத்தை இழந்து விடு வோமோ என்ற அச்சத்தில், தமிழர்கள் அனைவரும் ஒன்று பட்டு ஜல்லிக்கட்டுக்காக சிறப்பாக போராடினர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் அடிபணிந்தன. தமிழக அரசு தலைவணங்கி சட்டப்பேரவையில் மசோதாவை ஒருமனதாக தாக்கல் செய்தது. இது இளைஞர்களின் வெற்றி. இதேபோன்று நாம் ஏன் சிறப்பு அந்தஸ்து கோரிக் கைக்காக ஆந்திராவில் போராட்டம் நடத்த கூடாது?
சிறப்பு அந்தஸ்து கோரி வரும் 26-ம் தேதி முதல் விசாகப்பட்டினம் கடற்கரையில் மாணவர்கள் நடத்தும் மவுனப் போராட்டத்துக்கு ஜனசேனா கட்சி ஆதரவு அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் விசாகப்பட்டினத்தில் மாணவர்கள் நடத்தவுள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் வரும் 26-ம் தேதி முதல் தனது கட்சி சார்பிலும் 13 மாவட்டங் களிலும் மவுனப் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அமரா வதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பி னர். இதற்கு சந்திரபாபு நாயுடு, “ஜல்லிக்கட்டுக்கும், மாநில சிறப்பு அந்தஸ்துக்கும் என்ன தொடர்பு உள்ளது. மாநில சிறப்பு அந்தஸ்துக்கு பதில், சிறப்பு நிதி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதலால் இந்த அறிவிப்பு தேவையற்றது” என்றார்.