கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ், ஜகந்நாத் மிஸ்ரா ஆகியோர் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜராயினர்.
தியோகார் மாவட்ட கருவூலம், டொரண்டா ராஞ்சி கருவூலம் ஆகியவற்றில் இருந்து முறைகேடாக பணம் பெற்றது தொடர்பான 2 வழக்குகளில் லாலு ஆஜரானார். தியோகார் மாவட்ட கருவூல முறைகேடு வழக்கில் மிஸ்ரா ஆஜரானார்.
லாலு செய்தியாளர்களிடம் கூறும்போது, “நீதிமன்றம் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. என்னை அழைக்கும்போதெல்லாம் ஆஜரா வேன்” என்றார்.