இந்தியா

தேர்தலுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் பிரச்சாரம்: அரசியல்வாதிகள் ஊருக்குள் நுழைய எதிர்ப்பு

செய்திப்பிரிவு

ஒடிசா மாநிலத்தில் தேர்தலை புறக் கணிக்க வலியுறுத்தி மாவோயிஸ்டு கள் சுவரொட்டிகள் மூலம் பிரச் சாரம் செய்து வருகின்றனர்.

கோராபுட் மாவட்டத்திலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள மஜி குடா, தஸ்மாந்த்புர் உள்ளிட்ட ஊராட்சிகளில் தேர்தலுக்கு எதி ரான சுவரொட்டிகளை மாவோயிஸ்டுகள் ஒட்டியுள்ளனர்.

“அனைத்து அரசியல்வாதி களும் ஏழைகளுக்கு எதிரானவர் கள். அரசியல்வாதிகளை பிரச் சாரத்துக்காக கிராமத்துக்குள் அனு மதிக்கக் கூடாது. பழங்குடியினரின் வளர்ச்சியை அவர்கள் புறக் கணித்து விட்டு, பசுமை வேட்டை என்ற நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது. மாவோயிஸ்டு களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி பழங்குடி யினரை அரசு வதைத்து வருகிறது. நமது சட்டப்பூர்வ உரிமையைப் பெற ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை” என்று சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டிகளில் சிலவற்றைப் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக கோராபுட் காவல்துறை கண்காணிப்பாளர் அவிநாஷ் குமார் கூறியதாவது:

விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. ஆந்திரம் மற் றும் சத்தீஸ்கர் பகுதியிலிருந்து மாவோயிஸ்டுகள் உள்ளே நுழை வதைத் தடுக்க பாதுகாப்புப் படையி னருடன் இணைந்து எல்லையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப் படும் என்றார்.

SCROLL FOR NEXT