வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி சகாரா குழுமத் தலைவர் சுபத்ரா ராய் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார்.
முதலீட்டாளர்களின் ரூ.20 ஆயிரம் கோடியை குறிப்பிட்ட தேதியில் திருப்பி அளிக்க தவறியமைக்காக சுபத்ரா ராய் மற்றும் அவரது குழுமத்தின் இயக்குநர்கள் வந்தனா பார்கவா, ரவி சங்கர் துபே, அசோக் ராய் செளத்ரி ஆகியோர் வெளிநாடு செல்ல கடந்த நவம்பர் 21-ம் தேதி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் வெளிநாடு செல்ல தன்னை அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் சுபத்ரா ராய் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜே.எஸ்.கெல்கர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வரும் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.