நடிகை பாவனாவுக்கு நேற்று எளிமையான முறையில் அவரது இல்லத்தில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
கன்னட சினிமா தயாரிப்பாளரும், தொழிலதிபரு மான நவீனும், பாவனாவும் காதலித்து வந்தனர். இருவருக்கும் திருச்சூரில் உள்ள பாவனாவின் இல்லத்தில் நெருங்கிய உறவினர் கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் நிச்சய தார்த்தம் நேற்று நடந்தது.
இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என நெருங்கிய உறவினர்களிடம் பாவனா கூறியுள்ளார்.
நடிகர் அனூப் மேனன் ஃபேஸ்புக் பதிவின் வழியாக, இருவரையும் வாழ்த்தியுள்ளார்.
அதில், ''சமீப கால சிறந்த தம்பதி இவர்கள். நவீன் குறித்து தனிப்பட்ட முறையில் அறியாதவர்களுக்கு ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகிறேன். அவர் மிகவும் உயர்ந்த மனிதர். அவர்களின் வாழ்க்கை சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.
நிச்சயதார்த்தம் தொடர்பாக இணையத்தில் வெளியான புகைப்படங்களில் மஞ்சு வாரியர் உள்ளிட்ட சிலர் காணப்படுகின்றனர்.
தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமாக விளங்கும் பாவனா, கன்னட சினிமா தயாரிப்பாளரான நவீனை 4 வருடங்களாக காதலித்து வந்தார்.
தற்போது பாவனா 'ஆடம்' மற்றும் 'ஹனி பீ 2' ஆகிய மலையாளப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.