பிரதமர் மோடி தேசிய அளவிலும் மேற்குவங்க முதல்வர் மாநில அளவிலும் ஜனநாயகத்தை நசுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்நிலையில், புர்த்வான் மாவட்டம் நியமத்பூரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் முதல் முறையாக இடதுசாரி தலைவர்களுடன் ராகுல் காந்தி ஒரே மேடையில் பங்கேற்று பேசியதாவது:
பிரதமர் மோடி தேசிய அளவில் ஜனநாயகத்தை நசுக்க முயற் சித்து வருகிறார். இதன்படி அருணாச்சல், உத்தராகண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விட்டார்.
தேசிய அளவில் பிரதமர் மோடி என்ன செய்கிறாரோ அதையே இந்த மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியும் செய்து வருகிறார். நாடாளுமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் நான் பேசியிருக்கிறேன். அப்போது, “மம்தா என்ன நினைக்கிறாரோ அதைத்தான் செய்வார். யாரும் அவருக்கு எதிராக எதுவும் பேச முடியாது” என அவர்கள் தெரிவித்தனர்.
பாஜகவில் என்ன நடக்கிறதோ அதேதான் இங்கும் நடக்கிறது. ஒவ்வொருவரின் குரலையும் கேட் கக்கூடிய அரசு இங்கு அமைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஸ்டிங் ஆபரே ஷனை அடிப்படையாகக் கொண்டு உத்தராகண்ட் அரசை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. ஆனால், மேற்கு வங்கத்திலும் ஆளும் கட்சியினருக்கு எதிராக ஸ்டிங் ஆபரேஷன் மூலம் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதை மத்திய அரசு வேறு விதமாக பார்க்கிறது. எனவே, பாஜகவும் திரிணமூல் காங்கிரஸும் மறைமுக உடன்பாடு கொண்டுள்ளன.
கடந்த 2011-ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திரிணமூல் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்டதில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. மம்தா முதல்வரான பிறகு அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் தொடங்கப்பட்ட உணவுப் பாது காப்பு திட்டத்தை மம்தா மறந்து விட்டார். காங்கிரஸ் கட்சியை நசுக்கவும் மம்தா முயன்று வருகி றார். இவ்வாறு அவர் தெரிவித் தார். முன்னதாக, கொல்கத்தாவில் வியாழக்கிழமை மேம்பாலம் இடிந்து விழுந்த பகுதியை ராகுல் பார்வையிட்டார். பின்னர் விபத்தில் காயமடைந்து கொல்கத்தா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ராகுல் சந் தித்து ஆறுதல் கூறினார்.