டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடை பெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு இத் தேர்தலில் 810 பேர் போட்டியிடு கின்றனர். பாஜக 66 தொகுதிகளில் போட்டி யிடுகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் 70 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
பகுஜன் சமாஜ் கட்சி 69 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 27 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 224 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.
தேமுதிக போட்டி:
இவர்கள் தவிர தமிழகத்தைச் சேர்ந்த தேமுதிக, தமிழர்கள் அதிகம் வசிக்கும் 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இங்கு 4வது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிரம் காட்டிவரும் நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்ற பாஜக அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான ஆம் ஆத்மி கட்சியின் வரவால் டெல்லியில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதுடன், போட்டி யின் தன்மையும் மாறியுள்ளது. ஊழலுக்கு எதிரான கோஷத்துடன் களமிறங்கியுள்ள அக்கட்சி, இத் தேர்தலில் தாக்குப்பிடிக்குமா என்பதை அறிய அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர்.