இந்தியா

குவியும் அதிமுகவினர்: பெங்களூர் - ஓசூர் சாலையில் போக்குவரத்து நெருக்கடி

இரா.வினோத்

உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா உத்தரவிட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் இருந்து ஏராளமான அதிமுகவினர் பெங்களூர் விரைந்து வருகின்றனர். வாகனங்கள் அதிக அளவில் வருவதால் பெங்களூர் - ஓசூர் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதேபோல் பெங்களூர் எலக்ட்ரானிக் நகரில் இருந்து பரப்பன அக்ரஹார சிறைச்சாலை செல்லும் பகுதியில் 1 கி.மீ முன்னதாகவே அதிமுக தொண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில், சாலையில் இருபுறமும் கயிறுகள் கட்டப்பட்டுள்ளது. கயிறு தடுப்புகளுக்கு பின்னர் அதிமுக தொண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மழை பெய்து வருகிறது. இருந்தாலும் அதிமுக தொண்டர்கள் கலைந்து செல்லாமல் ஜெயலலிதா வருகைக்காக காத்திருக்கின்றனர். கைகளில் அதிமுக கொடியும், ஜெயலலிதாவை வரவேற்று பதாகைகளையும் ஏந்தி நிற்கின்றனர்.

இதேபோல் பத்திரிகையாளர்களும் சிறை வளாகத்திற்கு 1 கி.மீ தூரத்துக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT