கோப்புப் படம்

 
இந்தியா

கலப்பட நெய்யில் 20 கோடி லட்டு: சிறப்பு விசாரணை குழு தகவல்

செய்திப்பிரிவு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த 2019 முதல் 2024 வரை லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் உபயோகப்படுத்தப்பட்டது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக விசாரிக்க சிபிஐ தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

இந்த குழு வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2019 முதல் 2024 வரை ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கலப்பட நெய் வாங்கப்பட்டிருக்கிறது. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வாங்கப்பட்ட 1.61 கோடி கிலோ நெய்யில் 68 லட்சம் கிலோ நெய் கலப்பட நெய் ஆகும். ஏழுமலையான் கோயிலில் தினமும் 3.5 முதல் 4 லட்சம் லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் 20.1 கோடி லட்டு பிரசாதங்கள் கலப்பட நெய்யினால் தயாரிக்கப்பட்டவை. இவ்வாறு சிறப்பு விசாரணை குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT