கோப்புப்படம்

 
இந்தியா

ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

குப்வாரா: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கெரன் பிரிவின் எல்லைப் பகுதியான ஜும்குண்டில் இந்தச் சம்பவம் நேற்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்க முயன்றிருக்கலாம் எனக் கருதப்படும் அந்தக் குழுவில் மூன்று முதல் நான்கு பேர் இருந்ததாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவித்தன.

நேற்று அதிகாலையில் சந்தேகத்துக்கிடமான நடமாட்டத்தைக் கண்ட பாதுகாப்புப் படையினர், அந்த மர்ம நபர்களை எச்சரித்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதலைத் தீவிரப்படுத்தினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT