இந்தியா

உ.பி.யில் நிகழ்ந்த கார் விபத்தில் ரவுடி அதிக் அகமது மகன் உட்பட 2 பேர் உயி​ரிழப்பு

செய்திப்பிரிவு

ஜான்சி: உத்​தரபிரதேச மாநிலத்​தைச் சேர்ந்​தவர் அதிக் அகமது. பிரபல ரவுடி கும்​பல் தலை​வரும் அரசி​யல்​வா​தி​யு​மான இவரை ஒரு வழக்​கில் கடந்த 2023 ஏப். 15-ம் தேதி போலீ​ஸார் கைது செய்தனர்.

பிர​யாக்​ராஜில் மருத்​து​வப் பரிசோதனைக்​காக மருத்​து​வக் கல்லூரிக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டார். அப்​போது, செய்தியாளர்களாக நடித்து உடன் வந்த மூவர், அதிக் அகமது (60) மற்​றும் அவரது சகோ​தரர் அஷ்ரஃபை துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொன்றனர். இந்த இரட்​டைக் கொலை சம்​பவம் அப்​போது நாடு முழு​வதும் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. அதிக் அகமது​வுக்கு 5 மகன்​கள் உள்​ளனர்.

இந்​நிலை​யில், இவரது இளைய மகனான அபான் தனது நண்பர்களு​டன் காரில் ஜான்​சி​யில் உள்ள சிறை​யில் அடைக்கப்பட்​டுள்ள தனது சகோ​தரர்​கள் உமர் மற்​றும் அலி ஆகியோரை சந்​திக்க சென்​றார். வழி​யில் பூஞ்ச் என்ற இடத்​தில் சென்​ற​போது, அவர்​கள் சென்ற கார் கட்​டுப்​பாட்டை இழந்து சாலைத் தடுப்​பில் மோதி விபத்​துக்​குள்​ளானது.

இதில், காரில் பயணம் செய்த அபான் அகமது மற்​றும் அவரது நண்​பர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். மேலும், காரில் பயணம் செய்த 3 பேர் படு​கா​யம் அடைந்​தனர். அவர்​கள் அங்குள்ள மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். அதிக் அகமது​வின் மற்​றொரு மகனான அசத் அகமது, 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்​கின் முக்​கிய சாட்​சி​யாக இருந்த உமேஷ் பால் கொலை வழக்​கில் தேடப்​பட்டு வந்த நிலையில், 2023 ஏப்​ரலில் ஜான்சி அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்​டுக் கொல்லப்பட்டார்.

SCROLL FOR NEXT