இந்தியா

எவரெஸ்ட் அருகே 2 ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: சென்னை சுற்றுலாப் பயணி பரிதாப உயிரிழப்பு

செய்திப்பிரிவு

காத்மாண்டு / புதுடெல்லி: நேபாளத்​தில் உள்ள எவரெஸ்ட் மலைப்​பகுதி அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்​கும்​போது ஒன்​றோடொன்று மோதி விபத்துக்​குள்​ளானதில், சென்னையைச் சேர்ந்த சுற்​றுலாப் பயணி சம்​பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

நேபாளத்​தின் சோலுகும்பு மாவட்​டத்​தில், கடல் மட்​டத்​தி​லிருந்து 4,371 மீட்​டர் உயரத்​தில் அமைந்​துள்ள ‘பெரிச்சே’ ஹெலிபேடில் நேற்று காலை 8:11 மணி​யளவில் (இந்​திய நேரப்​படி காலை 7:56) ‘ஃபிஷ்டெயில் ஏர்’ நிறு​வனத்​தின் ஹெலிகாப்​டரும், சரக்​கு​களை ஏற்றி வந்த ‘ஏர் டைனஸ்டி’ நிறு​வனத்​தின் ஹெலிகாப்​டரும் ஒரே நேரத்​தில் தரையிறங்க முற்​பட்​டபோது பயங்​கர​மாக மோதிக்​கொண்​டன.

இந்த விபத்​தில், சென்​னையைச் சேர்ந்த வசந்த்குமார் பலராம​ராமடு (47) என்ற சுற்​றுலாப் பயணி சம்​பவ இடத்​திலேயே உயிரிழந்​தார். மேலும், நியூஸிலாந்து குடியுரிமை பெற்ற இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த சைலேஷ் கிருஷ்ணா படேல் மற்​றும் பைலட் ரவீந்​திர பிரஜாபதி ஆகிய இரு​வர் படுகாயமடைந்​தனர். அவர்​கள் உடனடி​யாக காத்​மாண்​டு் மருத்​து​வ​மனைக்கு ஹெலிகாப்​டர் மூலம் கொண்டு செல்​லப்​பட்​டனர். மற்​றொரு பைலட்​டான பிரஜ்​வல் கேசி லேசான காயங்​களு​டன் தப்​பினார்.

விபத்து நடந்த நேரத்​தில் அப்​பகுதி​யில் வானிலை மிகவும் தெளிவாக இருந்​த​தாக சோலுகும்பு மாவட்ட முதன்மை அதி​காரி காமன் சிங் தாப்பா மகர் தெரி​வித்​துள்​ளார். எனவே, மோச​மான வானிலை​யால் இந்த விபத்து நடக்​க​வில்லை என்​றும், ஹெலிகாப்டரில் ஏற்​பட்ட திடீர் தொழில்​நுட்​பக் கோளாறே விபத்துக்​குக் காரணம் என்​றும் முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. வசந்த் குமாரின் உடல் ‘லுக்லா’ பகுதி​யில் வைக்​கப்​பட்​டுள்​ளது. சட்​டப்​பூர்வ நடைமுறைகள் முடிந்​தவுடன் அவரது உடல் காத்​மாண்டு கொண்டு வரப்​பட்டு, இந்​தி​யத் தூதரக அதி​காரி​களிடம் ஒப்​படைக்​கப்​படும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT