இந்தியா

உ.பி.யில் கார் மோதியதில் 2 சகோதரர்கள், ஒரு சகோதரி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

பரிதாபாத்: உத்தர பிரதேச மாநிலம் அமேதியைச் சேர்ந்த சகோதரர்கள் அகிலேஷ் (29), அவதேஷ் (27). இவர்கள் இருவரும் ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள மங்கர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

ரக் ஷா பந்​தன் பண்​டிகையை கொண்​டாடு​வதற்​காக இவர்​களது சகோ​தரி​கள் இரு​வர் கடந்த வெள்​ளிக்​கிழமை பரி​தா​பாத் வந்தனர். அங்கு அவர்​கள் தங்​களின் இரு சகோ​தரர்​களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி ரக் ஷா பந்​தனை கொண்​டாடினர்.

பின்​னர் மறு​நாள் காலை​யில் இவர்கள் 4 பேரும் பேருந்​துக்​காக காத்​திருந்​த​போது அதிவேக​மாக வந்த கார் ஒன்று அவர்​கள் மீது பயங்​கர​மாக மோதி​யது. இதில் 2 சகோ​தரர்​கள், ஒரு சகோ​தரி உயி​ரிழந்​தனர்​.

SCROLL FOR NEXT