இந்தியா

பங்குச் சந்தையில் லாபம் ஈட்டித் தருவதாக கூறி ரூ.80 லட்சத்தை மோசடி செய்த 2 பேர் டெல்லியில் கைது

செய்திப்பிரிவு

டெல்லி: பங்குச் சந்​தை​யில் லாபம் ஈட்​டித் தரு​வ​தாக கூறி ரூ.80 லட்​சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்​ளனர்.

டெல்லி கரோல்​பாக் பகு​தி​யைச் சேர்ந்த பியூஷ் குமார் (31) என்​பவரும், ஹரி​யானா குரு​கி​ராமைச் சேர்ந்த ஜதின் கஜோ​தியா (31) என்​பவரும் பங்​குச் சந்​தை​யில் முதலீடு செய்து வந்​துள்​ளனர். இவர்​கள் டெல்​லியைச் சேர்ந்த ஒரு​வரிடம், பங்குச் சந்​தை​யில் லாபம் ஈட்​டித் தரு​கிறோம் என உறு​தி​யளித்து ரூ.80 லட்​சத்தை பெற்​றுள்​ளனர். ஆனால் அவருக்கு லாபத் தொகை​யும் அளிக்​க​வில்​லை, முதலீட்டு பணத்​தை​யும் திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளனர்.

இதனால் அவர் இருவர் மீதும் போலீ​ஸில் மோசடி புகார் அளித்தார். போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில் இரு​வரும் ரூ.80 லட்​சம் பணத்தை பலரது வங்கி கணக்​குக்கு மாற்றி மோசடி செய்தது உறு​தி​யானது. இதையடுத்து நட்​சத்​திர ஓட்​டலில் தங்கியிருந்த பியூஷ் குமார், குரு​கி​ராமில் தங்​கிருந்த கஜோதியாவை போலீ​ஸார் கைது செய்​தனர். இவர்​களது பெயரில் பங்​குச் சந்​தை​யில் இருந்த ரூ.25 லட்​சம் மதிப்​பிலான பங்​கு​களும்​ முடக்​கப்​பட்​டன.

SCROLL FOR NEXT