டெல்லியில் பிரதமரின் அதிகாரப் பூர்வ இல்லம் அமைந்திருக்கும், ரேஸ் கோர்ஸ் சாலையின் பெயர், லோக் கல்யாண் மார்க் என மாற்றப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் கள் சந்திப்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளி யிடப்பட்டது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், புதுடெல்லி மாநகராட்சி தலைவர் நரேஷ்குமார், பாஜக எம்பி மீனாட்சி லேகி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
“பிரதமர் மோடி உட்பட பலரும் மக்கள் நலனை நோக்கமாகக் கொண்டே அரசியலுக்கு வந்தோம். மக்கள் நலனை விட பெரியது வேறில்லை. எனவே, பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வசிக் கும் இச்சாலைக்கு, லோக் கல்யாண் (மக்கள் நலன்) எனப் பெயரிடுவது பொருத்தமானது” என பாஜக எம்பி லேகி குறிப்பிட்டார்.