பைலின் புயலைத் தொடர்ந்து, ஒடிசாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மயூர்பஞ், பாலாசூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் புகுந்துள்ள பகுதிகளில், மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மயூர்பஞ், பாலாசூர் மாவட்டங்கள் வழியாக பாயும் புதபலங்கா மற்றும் சுபர்நரேகா ஆகிய நதிகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனால் இம்மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
எனவே, ஆங்காங்கே சிக்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு முதல் கட்டமாக வான்வழியாக உணவுப் பொட்டலங்களை வினியோகிக்க புயல் மீட்பு மற்றும் நிவாரண குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.