இந்தியா

அதிமுக செய்தித் தொடர்பாளராக வா.புகழேந்தி நியமனம்

இரா.வினோத்

கர்நாடக மாநிலம், பெங்க ளூருவைச் சேர்ந்த புகழேந்தி அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அக் கட்சியில் முக்கிய நிர்வாகி யாக இருந்து வருகிறார். புகழேந்தியை கர்நாடக மாநில அதிமுக செயலாளராக ஜெய லலிதா நியமித்தார். புதுவை தேர்தல் பொறுப்பாளராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.

கடந்த 2014-ல் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய் யப்பட்டனர். சிறையில் இருந்த நால்வருக்கும் தேவையான உதவிகளைச் செய்தார். மேலும் அவர்கள் ஜாமீனில் வெளிவருவதற்காக புகழேந்தி யும், அவரது குடும்பத்தினரும் உத்தரவாதம் வழங்கினர்.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வின் அறிவுரையின் பேரில், வா.புகழேந்தி அதிமுக செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுவதாக கட்சி யின் துணைப் பொதுச் செய லாளர் டிடிவி தினகரன் அறி வித்தார். அதிமுக வரலாற்றில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் கட்சியின் செய்தித் தொடர் பாளராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.

          
SCROLL FOR NEXT