குறைந்த விலை வீடுகளுக்கு உள் கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப் படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் கூறியிருப் பதாவது:
ஏழை, நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் கிடைப்பதற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக குறைந்த விலை வீடுகளுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்படும். இதன் மூலம் இத்தகைய திட்டங்களை மேற்கொள்வதற்கு கூடுதல் சலுகைளை பெறலாம்.
மேலும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வீட்டுக் கடன் வட்டியில் மானியம் வழங் கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த வட்டி மானியங்கள் தேசிய வீட்டு வசதி வங்கியின் (என்எச்பி) மூலம் வங்கி களுக்கு வழங்கப்படும். இதற்காக என்எச்பிக்கு வரும் நிதியாண்டுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.