இந்தியா

திருப்பதியில் சரஸ்வதி யாகம்: ஏராளமான மாணவர்கள் குவிந்தனர்

செய்திப்பிரிவு

திருப்பதி தேவஸ்தானம், இந்து தர்ம பிரச்சார பரிஷத் சார்பில், மாணவ, மாணவியர்கள் முழு ஆண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டி ஸ்ரீராமர் கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை சரஸ்வதி யாகம் நடைபெற்றது.

தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால் முன்னிலையில் நடைபெற்ற இதில் திருப்பதி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதி களிலிருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர் ஆகிய உற்சவர்களின் திருவீதி உலா நடந்தது. பின்னர் வேத பண்டிதர்கள் வித்யா ஹோமம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து யாகத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு தேர்வு நன்றாக எழுத கங்கண கயிறுகள் வழங்கப்பட்டன.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் இனி ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும் என அதிகாரி எம்.ஜி. கோபால் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT