இந்தியா

கோவா, கர்நாடகாவில் பருவமழை தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்திருப்பதால், தமிழகத்தின் ஒருசில மாவட்டங் களிலும் லட்சத்தீவு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அடுத்த ஒரிரு தினங்களில் வட கிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, அஸ்ஸாம் மற்றும் கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பருவமழை தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இம்மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் தொடர்ந்து கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அம்மாநிலத்தின் கங்காநகரில் மிக அதிகபட்சமாக 110 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதே போல் ஜெய்ப்பூர் கோட்டா, ஜெய்சல்மர், பிலானி ஆகிய மாவட்டங்களின் பிற பகுதிகளிலும் 110 டிகிரி வரை வெயில் சுட்டெரித்து வருகிறது. பிஹார், உ.பி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் 104 டிகிரிக்கு அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT