இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

செய்திப்பிரிவு

காஷ்மீர் மாநிலம் ஜம்மு பிராந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மீண்டும் அத்துமீறி தாக்குதலை நடத்தியது.

ஜம்மு மாவட்டத்தின் பார்க் வால் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசியது. சுமார் 10-க்கும் மேற்பட்ட இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

ஜம்மு மாவட்ட ஆட்சியர் அஜித் குமார் சாகு கூறும்போது, காலை 10.30 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் உயிரிழப்போ, பொருள் இழப்போ இல்லை என்று தெரிவித்தார்.-பிடிஐ

SCROLL FOR NEXT