இந்தியா

மாவோயிஸ்டு தாக்குதலில் பாதுகாப்பு வீரர் படுகாயம்

செய்திப்பிரிவு

சத்தீஸ்கரில் சட்டமன்றத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் பணியில் 1 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை காண்கர் மாவட்டத்தில் உள்ள பர்லாகோட் கிராமத்தில் மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். கிராம முதன்மை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டப் பின்னர், மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வாக்குசாவடிக்கு அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

SCROLL FOR NEXT