மத்திய பட்ஜெட்டில் வரும் 2019-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வறுமையை ஒழிக்க மத்திய அரசு சார்பில் அந்தியோதயா திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. வரும் 2019-ம் ஆண்டில் தேசத் தந்தை மகாத்மா காந்தி யின் 150-வது பிறந்த தின விழா கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி வரும் 2019-ம் ஆண்டுக் குள் அந்தியோதயா திட்டத்தில் நாடு முழுவதும் ஒரு கோடி குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் 50,000 பஞ்சாயத்துகளை வறுமை இல்லாத பஞ்சாயத் துகளாக மாற்றவும் திட்டமிட்டுள் ளோம்.
கிராமங்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் ரூ.3 லட்சம் கோடி செல விடப்படுகிறது. இதன்மூலம் கிராமங்கள் வேகமாக வளர்ச்சி அடையும்.