டெல்லியில் கடந்த 2009-ம் ஆண்டு ஐ.டி. பெண் ஊழியர் ஜிகிஷா கோஷ் கொல்லப்பட்ட வழக் கில் 3 பேர் குற்றவாளிகள் என விசாரணை நீதிமன்றம் நேற்று அறி வித்தது. குற்றவாளிகளுக்கு தண் டனை குறித்த விவாதம் ஆகஸ்ட் 20-ம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
28 வயதான ஜிகிஷா கோஷ், தனியார் நிறுவனம் ஒன்றில் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2009, மார்ச் 18-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு, தெற்கு டெல்லி, வசந்த் விஹார் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அருகில் அலுவலக காரில் இருந்து இறங்கினார். அதன் பிறகு கடத்தப்பட்ட அவர் கொல்லப்பட்டார். அவரது உடல் 3 நாட்களுக்குப் பிறகு ஹரியாணா மாநிலத்தின் சூரஜ்குண்ட் அருகே புதரில் இருந்து மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜித் சிங் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2009, ஜூனில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை 2010 ஏப்ரலில் தொடங்கியது. இறுதி வாதம் கடந்த 5-ம் தேதி முடிந்தது.இந்நிலை யில் மேற்கண்ட மூவரும் குற்ற வாளிகள் என கூடுதல் அமர்வு நீதிபதி சந்தீப் யாதவ் நேற்று அறிவித்தார்.