இந்தியா

மகாராஷ்டிர மாநிலத்தில் துணை ஆட்சியர் கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு

செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலத்தில், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஒருவர் மாவட்ட துணை ஆட்சியரின் கன்னத்தில் அறைந்துள்ளார். ஒரு வாரத்துக்குப் பிறகு இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

ரெய்கட் மாவட்டத்தில் எண் ணெய் பைப்லைன் போட திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அப்பகுதி விவசாயிகளுடன் பிரச்சினை இருந்துள்ளது. இதற்கு தீர்வு காண்பதற்காக, மாவட்ட துணை ஆட்சியர் அபய் கல்குட்கர் கடந்த வாரம் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கு மாறு, சரத் பவார் கட்சியின் கர்ஜத் தொகுதி எம்எல்ஏ சுரேஷ் லாடுக்கு அழைப்பு விடுக்கப்பட்டி ருந்தது. இதன் அடிப்படையில், விவாசாயிகள் குழுவினருடன் லாட் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு வழங்கப்படும் இழப்பீடு குறைவாக இருப்பதாகக் கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சுரேஷ் லாடும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், துணை ஆட்சியர் கல்குட்கர் மற்றும் இன்னொரு அதிகாரியின் சட்டையைப் பிடித்து லாட் இழுத்துள்ளார். கல்குட்கரின் கன்னத்திலும் அறைந்துள்ளார். எனினும், இது தொடர்பாக அந்த அதிகாரி எம்எல்ஏ-வுக்கு எதிராக புகார் கொடுக்கவில்லை.

ஒரு வாரத்துக்குப் பிறகு இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. அதில், லாட் கன்னத்தில் அறைந்தபோது, தயவு செய்து நிறுத்துங்கள் என்று அந்த அதிகாரி கூறுகிறார். பின்னர், “உங்கள் மீது போலீஸில் புகார் செய்வேன்” என்று லாட் கூறுகிறார்.

இதையடுத்து பத்திரிகை யாளர்களை சந்தித்த லாட், இது போன்ற சம்பவம் நடக்கவில்லை என மறுத்தார்.

SCROLL FOR NEXT