இந்தியா

அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்கள்: சல்மான், அக் ஷய் குமாரை முந்தினார் ஷாருக்கான்

செய்திப்பிரிவு

கலை, பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகிய துறைகளில் 2016, ஜூன் முதல் இந்த மாதம் வரை அதிகம் சம்பாதித்த பிரபலங்களை வரிசைப்படுத்தி போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் முதல் 5 இடங்களை சீயன் காம்ப்ஸ் (அமெரிக்க ராப் இசை பாடகர்), பியான்ஸ் (அமெரிக்க நடிகை, பாடகி), ஜே.கே.ரவ்லிங் (ஹாரி பாட்டர் எழுதிய எழுத்தாளர்), டிரேக் (கனடா பாடகர், தயாரிப்பாளர்) மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ (கால்பந்து வீரர்) இடம் பிடித்துள்ளனர்.

பொழுதுபோக்கு துறையில் ஷாருக்கான், சல்மான் கான், அக்்ஷய் குமார் ஆகிய 3 இந்திய நடிகர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். இதில் கடந்த ஆண்டு 86-வது இடத்தில் இருந்த ஷாருக்கான், இந்த ஆண்டு சல்மான் கானை பின்னுக்குத் தள்ளி 65-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஷாருக்கானுடன் ஜெனிபர் லோபஸ் மற்றும் இசைக் குழு வான ‘தி செயின் ஸ்மோக்கர்ஸும்’ 65-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

எட் ஷீரன், டாலி பார்டன், பில் ஒ ரெய்லி மற்றும் நெய்மருடன் 71-வது இடத்தை மற்றொரு சல்மான் கான் பகிர்ந்து கொண்டுள்ளார். கால்நூற்றாண்டுக்கு மேலாக பாலிவுட் பாக்ஸ் ஆபிஸின் மன்னனாக நடிகர் அக்்ஷய் குமார் நீடித்து வருவதாக புகழாரம் சூட்டியுள்ளது.

SCROLL FOR NEXT