பீகார் மாநிலம் கயாவில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில் கயாவில் இரண்டு மொபைல் டவர்களை மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர்.
நேற்றிரவு, 100க்கு மேற்பட்ட மாவோயிஸ்டுகள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீஸ் எஸ்.பி. நிஷாந்த் திவாரி தெரிவித்தார்.
மோடி, மாவோயிஸ்டு ஆதிக்கம் நிறைந்த சசாரம், கயா மாவட்டங்களில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் டி.ஜி.பி. அபயானந்த் தெரிவித்துள்ளார்.