இந்தியா

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை

பிடிஐ

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் லஷ்கர் தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸார் அளித்த தகவலில், "காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) தீவிரவாதி மஜித் தர் உட்பட 3 பேர் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டர் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இவர்கள் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள்.

இந்த என்கவுன்ட்டர் தாக்குதல் புதன்கிழமை மாலை முதல் நடந்து வந்தது. புல்வாமா பகுதியில் இன்னும் பெருமளவு லஷ்கர் தொய்பா தீவிரவாதிகள் பகுதியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், சோப்போரில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT