இந்தியா

மைசூருவில் மரித்து போனதா மனிதாபிமானம்...? - விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றாமல் போட்டோ எடுத்ததால் 2 போலீஸார் மரணம்

இரா.வினோத்

மைசூருவில் சாலை விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றாமல் அதை போட்டோ எடுத்து கொண்டிருந்த‌தால் 2 போலீஸார் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் மக்களிடையே மனிதாபிமானம் மரித்து போய்விட் டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூருவில் குற்றத் தடுப்பு பிரிவில் மகேஷ் குமார் (38) காவல் ஆய்வாளராக வும், லட்சுமண் (33) காவலராகவும் பணியாற்றினர். கடந்த 28-ம் தேதி மாலை இருவரும் பணி நிமித்தமாக டி.நரசிப்புராவுக்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். ஆலஹள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது கர்நாடக அரசு பேருந்து ஜீப் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த மகேஷ் குமாரும், லட்சுமணும் ரத்த வெள் ளத்தில் உயிருக்குப் போராடினர். சாலையோர பள்ளத்தில் காயத் துடன் கிடந்த‌ மகேஷ்குமார், காப்பாற்றுமாறு கதறினார். அப்போது அவ்வழியாக சென்ற பயணிகள் வாகனத்தை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்த்தனர். இன்னும் சிலர் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மைசூரு மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ரவி சென்னமாவர், கூறும்போது, “சம்பவ இடத் துக்கு சென்று உயிருக்குப் போராடிய இருவரையும் எனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வேகமாக மருத்துவமனைக்கு சென்றேன். இவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித் திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்.

2003-ம் ஆண்டு காவல் துறையில் இணைந்த அவர் மிகவும் நேர்மையாகவும், கடமை உணர்ச்சியுடனும் பணியாற்றினார். மைசூருவுக்கு வந்த ஒரு ஆண்டில் 50-க்கும் மேற்பட்ட குழந்தை கடத்தலைத் தடுத்தார். மைசூருவில் நிகழ்ந்த பல்வேறு விபத்துகளில் சிக்கியவர்களைக் காப்பாற்றியுள்ளார். ஆனால் அவருக்கு யாரும் உதவி செய்ய வில்லை என நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது.

விபத்தில் சிக்கியவர்களுக்கு பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை மைசூரு மாநகரம் முழுவதும் நடத்த இருக்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT