ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) பிரிவினைவாத அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீநகரில் மைசுமா பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து யாசின் மாலிக் கைது செய்யப்பட்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதற்காக பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளிடமிருந்து பிரிவினைவாத அமைப்புகள் நிதியுதவி பெறுவதாக யாசின் மாலிக் மீது புகார் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சையது அலில் கிலானி, மிர்வாயிஸ் உமர் ஃபரூக் ஆகியோருடன் இணைந்து பிரிவினைவாத நடவடிக்கைகளில் யாசின் மாலிக் ஈடுபட்டுள்ளார்.