சத்தீஸ்கர் மாநிலம் தண்டகாரண்ய காடுகளில் உள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கியத் தலைவர் ஜி.வி.கே. பிரசாத், மனைவியுடன் ஆந்திர போலீஸில் சரணடைந்தார்.
மாவோயிஸ்ட் அமைப்பின் தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழுவின் முக்கியத் தலைவராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருந் தவர் குத்ஸா உசேந்தி (எ) ஜி.வி.கே. பிரசாத்.
இவரின் தலைக்கு ரூ.20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந் தது. இந்நிலையில் இவர் ஆந்திர போலீஸில் புதன்கிழமை சரணடைந் தார் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.