இந்தியா

யோகா தினத்துக்கு அமோக வரவேற்பு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

பிடிஐ

சர்வதேச யோகா தினத்துக்கு இந்த அளவு உற்சாகமான வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கடந்த 2014 டிசம்பரில் ஐ.நா. அங்கீ கரித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 36,000 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடந்தது. இதே போல் இந்த ஆண்டும் வரும் 21-ம் தேதி (நாளை) சண்டீக ரில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி காணொலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:

எனது கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா அறிவித்தது. இந்த நிகழ்ச்சிக்கு உலகத்தின் பல்வேறு மூலைகளில் இருந்தும் உற்சாகமான வரவேற்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

சர்வதேச யோகா தினத்துக்கு இந்த ஆண்டும் பெருந்திரளான மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண் டும். நமது நாட்டின் பண்டைய ஒழுக் கங்களில் ஒன்றான யோகாவை உலகம் முழுவதும் பரப்ப அனை வரும் உறுதியேற்க வேண்டும். ‘வசுதைவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்) என்ற கொள்கையின் வெளிப்பாடு தான் யோகா. அதை அனைவரும் கற்க வேண்டும்.

கடந்த ஆண்டு பசிபிக் தீவுகள் முதல் போர்ட் ஆப் ஸ்பெயின் வரையிலும், விளாடிவோஸ்டாக் முதல் வான்கூவர் வரையிலும், கோபன்ஹேகன் முதல் கேப்டவுன் வரையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கும் யோகா பயிற்சி செய்தனர். அந்த இனிமையான தருணத்தை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்.

வழக்கமான உடற்பயிற்சிகளை காட்டிலும் யோகா மேன்மை யானது. நமது சுயத்தை அறிந்து கொள்வதற்கான புதிய பரிணா மத்தை யோகா வெளிக்கொண்டு வரும். உடலுக்கான ஆரோக்கி யத்தையும் பேணிக் காக்கும். நமது பண்டைய ஒழுக்கத்தை உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருபவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொருவருமே யோகா கலையின் தூதுவர்களாக செயல் பட்டு, இந்தியாவின் பண்டைய ஒழுக்க தகவல்களை உலக நாடுகளுக்கு முன்னெடுத்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

யோகாவுக்கு 57 அமைச்சர்கள்

இதற்கிடையில் நாளை பல்வேறு மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா நிகழ்ச்சி களை சிறப்பாக நடத்துவதற்கும், தலைமை தாங்குவதற்கும் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, மனோகர் பாரிக்கர், ஸ்மிருதி இரானி, வெங்கய்ய நாயுடு, பியூஷ் கோயல், மேனகா காந்தி, முக்தார் அப்பாஸ் நக்வி உட்பட 57 மத்திய அமைச்சர் கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

150 மாற்றுத்திறனாளிகள்

பிரதமர் மோடி தலைமையேற் கும் சண்டீகர் யோகா நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக 150 மாற்றுத்திற னாளிகள் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்து காண்பிக்க வுள்ளனர். இதற்காக அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள் ளன. இந்நிலையில், அவர்களுக்கு திவ்யங்ஸ் என பிரதமர் நரேந்திர மோடி பெயரிட்டுள்ளார். போரில் உடல் உறுப்புகளை இழந்து சக்கர நாற்காலியில் நடந்து வரும் 18 முன்னாள் ராணுவத்தினரும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்கவுள்ளனர்.

இது குறித்து யோகா பயிற்சியா ளர் மணிஷ் வர்மா கூறும்போது, ‘‘யோகா நிகழ்ச்சியை எதிர்பார்த்து அவர்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக காத்திருக்கின்றனர். சிறப்பான முறையில் ஆசனங்களை செய்து காட்ட வேண்டும் என்ற உந்துதல் அவர்களிடம் காணப்படு கிறது. மேலும் பிரதமரிடம் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தங்களுக்குள் ஆர்வமாக பேசிக் கொள்கின்றனர்’’ என்றார்.

SCROLL FOR NEXT