ஊழல் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் கடந்த 8-ம் தேதி, காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில், மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது, மீனா தேவி என்ற தொண்டரின் உடலில் தீப்பிடித்தது. காயங்களுடன் உயிர் தப்பி மீனாவை அவரின் இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூற, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேற்று காஸியாபாத் வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ‘நாட்டில் தற்போது விலைவாசி உயர்வுதான் பிரதான பிரச்சினையாக உள்ளது. பணவீக் கம் குறைக்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி வாக்குறுதி அளித் தார். ஆனால் அதற்கு மாறாக பண வீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த படியே உள்ளது. இவ்விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தனது போராட் டத்தை தொடர்ந்து நடத்தும்’ என்றார்.