இந்தியா

ஆந்திரா செல்கிறார் ராகுல் காந்தி

செய்திப்பிரிவு

ஹுத்ஹுத் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மாநிலத்திற்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

அக்டோபர் 19, 20 தேதிகளில் ஆந்திராவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவர், ஸ்ரீகாகுளம், விஜியநகரம், விசாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். இந்த மூன்று மாவட்டங்களே ஹுத்ஹுத் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும்.

இதனையடுத்து இம்மாவட்டங்களில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆய்வு மேற்கொள்கிறார். இத்தகவலை ஆந்திரப் பிரதேசம் மாநிலம் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்.ரகுவீர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT