இந்தியா

லஞ்சம், ஊழலை தடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை: ஊழல் கண்காணிப்பு ஆணையம்

செய்திப்பிரிவு

வரி ஏய்ப்பு, கறுப்பு பணம் பதுக்கல், லஞ்சம், ஊழல் ஆகியவற்றை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 28 முதல் நவம்பர் 2ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புனர்வு வாரம் அணுசரிக்கப் படுகிறது.

இதனையொட்டி ஊழல் தடுப்பு விழிப்புனர்வு வார பிரச்சார கொள்கையை வெளியிட்டுள்ள ஆணையம் : லஞ்சம், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்றால் நிர்வாகத் துறையில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT