தபால் நிலையங்களில், ஓய்வூதிய தாரர்கள் தங்கள் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற் கான வசதி விரைவில் செய்து தரப்படும் என, மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
தபால் நிலையங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வசதிகள் இல்லாதது குறித்து, ஜெய்ப்பூரைச் சேர்ந்த மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இப்புகார் குறித்து மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியங் கள் துறையின் அதிகாரிகளும், ஓய்வூதிய சங்கப் பிரதிநிதிகளும், கடந்தவாரம், காணொளிக் காட்சி மூலம் கலந்தாய்வு மேற்கொண்ட னர். தபால் துறையிடமும் தனியே ஆலோசனை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, நாடு முழு வதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் ஓய்வூதியதாரர் கள் தங்கள் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க விரைவில் வசதிகள் செய்யப்படும் என, ஓய்வூதிய சங்கத்தினருக்கு உறுதி அளிக்கப்பட்டது.
தற்போது, ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு முறையும், வாழ்வு சான்று பெறுவதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது. ஆதார் எண் இணைக்கப்பட்டால், கைரேகை பதிவின் மூலம் இணையதளம் வழியாகவே, வாழ்வு சான்றை எளிதாக பெற முடியும்.