விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் நாளை முதல் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹுத்ஹுத் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாகப்பட்டினத்தில் கரையைக் கடந்தது. புயல் சீற்றத்தில் விசாகப்பட்டினம் விமான நிலையம் பலத்த சேதமடைந்தது. இதனையடுத்து விமான நிலையம் மூடப்பட்டது.
முதற்கட்ட மதிப்பீட்டின்படி, விமானநிலையத்தின் சேத மதிப்பு ரூ.500 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 4 நாட்களுக்குப் பிறகு, விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் விமானங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ கூறுகையில், விமான நிலையம் முழுமையாக சீர்படுத்தப்பட குறைந்தது 3 மாதங்களாவது ஆகும். அதுவரை பயணிகள் சிற்சில அசவுரியங்களை பொருத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.