மத்திய அமைச் சர் வெங்கய்ய நாயுடு ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘தமிழக சட்டப் பேரவையில் பாஜகவுக்கு போதிய எம்எல்ஏக்கள் இல்லை. அவ்வாறு இருக்கும் போது, தமிழகத்தில் ஏற் படும் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு பாஜக தான் பின் புலமாக இருந்து செயல் படுகிறது என எப்படி கூற முடியும். தற்போது நடக் கும் பிரச்சினை கள் அனைத் தும் அதிமுகவின் உள் விவகாரம். அந்தக் கட்சிக்குள் நடக்கும் பிரச்சினைகள் கவலையளிக்கின்றன. அர சமைப்பு சட்டத்தின்படியே இந்த விவகாரத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் முடிவு எடுப்பார். சட்ட வல்லுநர்களின் கருத்தை கேட்காமல் அவர் எந்த முடிவுக்கும் வரமாட்டார்’’ என்றார்.