அசாம் மாநிலத்தில் அமலில் உள்ள ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தில் திருத்தம் கோரி கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஐரோம் சர்மிளா, ஆம் ஆத்மி கட்சியில் இணைய மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஐரோம் சர்மிளா பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், தன்னை பிரசாந்த் பூஷன் அணுகியதாகவும் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மணிப்பூரில் இருந்து போட்டியிடுமாறு அழைப்பு விடுத்ததாகவும் கூறினார்.
இருப்பினும் தான் அந்த அழைப்பை ஏற்கப்போவதில்லை என்றும் ஒரு குடிமகளாக தனது கோரிக்கைக்கு செவி சாய்க்கப்படாத நிலையில் ஒரு அரசியல்வாதியாக ஆன பிறகே தன் கோரிக்கை மீது கவனம் திரும்பும் என்றால் அத்தகைய கவனிப்பு தனக்கு ஏற்புடையதில்லை என்றார்.
கடந்த 2000-ஆம் ஆண்டு அசாம் ரைபில்ஸ் படையினர் இம்பாலில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து தனது போராட்டத்தை துவக்கி ஐரோம் சர்மிளா இன்று வரை ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தில் திருத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.