இந்தியா

எங்களை கழுதை என்று வர்ணிப்பதா? - அகிலேஷ் யாதவ்வுக்கு பாஜக கடும் கண்டனம்

பிடிஐ

பிரதமரை குறிவைத்து ‘கழுதை’ என்று உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டது பாஜக-வினரின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

குஜராத் சுற்றுலாத்துறை விளம்பரத் தூதராக உள்ள அமிதாப் பச்சன் ‘குஜராத் கழுதைகளுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டாம்’ என்று முறையீடு செய்ததாக திங்களன்று உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

இதனையடுத்து பாஜக-வினர் கடுமையாக அகிலேஷ் மீதும் சமாஜ்வாதி மீதும் விமர்சனம் வைத்தனர்:

குஜராத் மாநில பாஜக தலைவர் ஜிது வகானி: குஜராத் கழுதைகள் என்று கூறியதன் மூலம் குஜராத் மக்களையே புண்படுத்தியுள்ளார் அகிலேஷ். தேர்தலில் தோல்வியை எதிர்கொண்டுள்ளார் அகிலேஷ் யாதவ், அதற்காக குஜராத்தை புண்படுத்த அவருக்கு யார் உரிமை அளித்தது.

பச்சன் ஒரு சூப்பர் ஸ்டார், உலகம் முழுதும் அவர் பிரபலமானவர். குஜராத் சுற்றுலாத் துறையின் விளம்பர தூதராக அமிதாப் பொறுப்பேற்ற பிறகு சுற்றுலாத்துறை வளர்ந்துள்ளது. குஜராத் வளர்ச்சியின் மீது அகிலேஷுக்கு உள்ள பொறாமையையே அவரது கூற்று வெளிப்படுத்துகிறது. இவரோடு கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் இவரது இந்த வர்ணிப்பை ஏற்கிறதா? என்றார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் ஹர்ஷத் படேல்: “கழுதைகள் தன்னை வளர்ப்பவர்களிடத்தில் நன்றியுடன் இருக்கும். அகிலேஷும் கழுதைகளிடமிருந்து பாடம் கற்று தன் தந்தைக்கு நன்றியுடையவராக இருப்பாராக. தன்னுடைய அரசின் சாதனைகள் குறித்து பேசுவதற்கு அவரிடம் ஒன்றுமில்லை எனவேதான் இல்லாததை பேசி பொழுதைக் கழிக்கிறார்” என்றர்.

SCROLL FOR NEXT