இந்தியா

சிஆர்பிஎப் இயக்குநராக ஆர்.ஆர்.பட்நாகர் பொறுப்பேற்பு

பிடிஐ

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குநராக நியமிக்கப் பட்ட மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.ஆர்.பட்நாகர் நேற்று பொறுப் பேற்றுக் கொண்டார்.

பதவியேற்ற பின்னர், கடந்த ஏப்ரல் 26 மற்றும் மார்ச் 11-ம் தேதிகளில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 37 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தருமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

டெல்லியில் லோதி சாலையில் உள்ள சி.ஆர்.பி.எப். தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்த அவரிடம், சி.ஆர்.பி.எப். இயக்குநராகத் தற்காலிகப் பதவி வகித்த சுதீப் லக்டாகியா பொறுப்புகளை ஒப்படைத்தார்.

போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் இயக்குநராக இருந்த பட்நாகர் (57), சி.ஆர்.பி.எப். இயக்குநராக வரும் 2019-ம் ஆண்டு டிசம்பர் வரை பதவியில் இருப்பார்.

SCROLL FOR NEXT