இந்தியா

பாலியல் வழக்கில் காயத்ரி பிரஜாபதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை

பிடிஐ

பாலியல் பலாத்கார வழக்கில் உ.பி. முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி மற்றும் 6 பேருக்கு எதிராக லக்னோ போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான முந்தைய அரசில் அமைச்சராக இருந்தவர் காயத்ரி பிரஜாபதி. இவரும் இவரது சகாக்கள் சிலரும் கடந்த 2014-ல் 35 வயது பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததாகவும் அவரது மகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக பிரஜாபதி மற்றும் 6 பேருக்கு எதிராக கடந்த பிப்ரவரி 17-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சுமார் 1 மாதம் தலைமறைவாக இருந்த பிரஜாபதி கடந்த மார்ச் 15-ம் தேதி கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் இதற்கு முன்னதாக கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பிரஜாபதி மற்றும் 6 பேருக்கு எதிராக லக்னோ நீதிமன்றத்தில் காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

SCROLL FOR NEXT