இந்தியா

தெற்கு காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

பீர்சதா ஆஷிக்

காஷ்மீரின் தெற்குப் பகுதியில் ட்ரால் எனும் இடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளுடனான இந்தச் சண்டையில் ஜம்மு-காஷ்மீர் காவலர் ஒருவர் வீர மரணமடைந்தார். அவரது பெயர் மன்சூர் அகமது எனத் தெரியவந்துள்ளது.

இந்த என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் தரப்பில், "ட்ரால் பகுதியில் நஸ்னீன்புரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இத்தகவலையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படை சுற்றிவளைத்தது. சனிக்கிழமை மாலை முதலே தேடுதல் வேட்டை தொடங்கியது. இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை காலை பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடனான சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும், தேடுதல் வேட்டையை தொடர முடியாதபடி மக்கள் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதால் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT