இந்தியா

பாகிஸ்தான் கைதிகள் 39 பேர் விடுதலை

பிடிஐ

இந்திய சிறைகளில் அடைக்கப் பட்டிருந்த பாகிஸ்தான் கைதிகள் 39 பேர் நேற்று விடுதலை செய்யப் பட்டனர். இவர்களில் 18 பேர் மீனவர்கள் ஆவர்.

இதுகுறித்து வெளியுறவு அமைச் சகம் நேற்று விடுத்துள்ள அறிக்கை யில் மேலும் கூறியிருப்பதாவது:

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 39 பேரும் தங்கள் நாட்டை சேர்ந்தவர்கள் என பாகிஸ்தான் உறுதி செய்ததை தொடர்ந்து இவர் கள் விடுதலை செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநிலம், வாகா சோதனைச் சாவடி வழியாக இவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். தகுதிவாய்ந்த பாகிஸ்தானிய சிவில் கைதிகள் மற்றும் மீனவர்களை உடனே விடுதலை செய்வது உட்பட அனைத்து மனிதாபிமான நடவடிக் கைகளுக்கும் இந்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தாலும் கடந்த ஆண்டு டிசம்பரில் நல் லெண்ண நடவடிக்கையாக இந்திய மீனவர்கள் 217 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இந்நிலையில் பாகிஸ்தான் கைதிகளை இந்தியா விடுவித்துள்ளது.

SCROLL FOR NEXT